வலிமை படத்தின் முழு படப்பிடிப்பும் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் முடிவடையும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் தற்போது வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஹெச்.வினோத் இயக்குகிறார்.நேர் கொண்ட பார்வை படத்தின் வெற்றியை அடுத்து இந்த கூட்டணி வலிமை படத்தில் இணைந்துள்ளது .அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . மேலும் இந்த படத்தில் ஹூமா குரேஷூ நாயகியாகவும் ,கார்த்திகேயா வில்லனாகவும்,அம்மாவாக நடிகை சுமித்ராவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும் யோகி பாபு,பேர்லி மன்னி,குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை .யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பானது வெளிநாடுகளில் நடத்த உள்ளதாக கூறப்பட்டிருந்தது.
இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒரு அப்டேட் கூட படக்குழுவினர் தரவில்லை இதனால் அஜித் ரசிகர்கள் சோகத்துடன் வலிமை அப்டேட் கேட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் தல அஜித்தின் வலிமை படம் குறித்த அப்டேட்டை பேட்டி ஒன்றில் போனி கபூர் தெரிவித்துள்ளார்.வலிமை படத்தின் முழு படப்பிடிப்பும் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் முடிவடையும் என்றும் ,ஒரு ஸ்டண்ட் காட்சி மட்டும் படமாக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கவுள்ளதாகவும், படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இதிலிருந்து தல ரசிகர்கள் ஒரு வருடமாக காத்திருந்த வலிமை பட அப்டேட் இன்னும் சில நாட்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது தல ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…