மீண்டும் உலகக்கோப்பையில் டி வில்லியர்ஸ்! மறுத்த தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம்
நடப்பு உலக கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணி மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது.காரணம் இங்கிலாந்து, வங்காளதேசம் , இந்தியா ஆகிய அணிகளுடன் தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளது.
இந்த மூன்று தோல்வியால் தென்னாப்பிரிக்கா அணி அரை இறுதிக்கு செல்ல வாய்ப்பு குறைவாகவே உள்ளது.தென்னாப்பிரிக்கா அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாட வில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் டி வில்லியர்ஸ் மீண்டும் உலக கோப்பையில் தொடரில் விளையாடுவதற்கு விருப்பம் என கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் மற்றும் தலைமை பயிற்சியாளர் ஓடிஸ் கிப்சனிடம் மூலம் தேர்வுக் குழுவுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
ஆனால் அவரது விருப்பதை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் நிர்வாகம் நிராகரித்த தாகவும், மீண்டும் அணியில் இணைய வாய்ப்பில்லை என தேர்வுக் குழுவினர் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியதாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளம் தெரிவித்து உள்ளது.
ஆனால் டி வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மே மாதம் 2018 ஆம் ஆண்டு அறிவித்தார். இந்நிலையில் தென்னாப்பிரிக்கா தற்போது உலக்கோப்பையில் தடுமாறி வரும் நிலையில் ஏபி டி வில்லியர்ஸை நிராகரித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் ரசிகர்கள் டி வில்லியர்ஸை “மிஸ்டர் 360” அழைப்பார்கள்.மைதானத்தில் பந்தை 360 டிகிரி பறக்கவிடுவதால் டி வில்லியர்ஸை ரசிகர்கள் இப்படி அழைப்பார்கள்.
டி வில்லியர்ஸ் இல்லாத இடத்தை நிரப்ப ஐடென் மார்கரம் மற்றும் ரேசி வான் டெர் டஸன் போன்ற வீரர்களை நம்பியிருக்க தென் ஆப்பிரிக்கா முடிவு செய்தது என ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளம் தெரிவித்து உள்ளது.
உலகக்கோப்பை தென் ஆப்பிரிக்க அணியில் டி வில்லியர்ஸ் இருந்து இருந்தால் இது வேறுபட்ட சூழ்நிலையாக இருக்கும்.
தென்னாப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ், கடந்த 2004ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். டெஸ்ட், ஒருநாள், 20 ஒவர் என அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி தனி முத்திரை பதித்தார்.
இவரது அதிரடி ஆட்டத்துக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. தென்னாப்பிரிக்காவை கடந்து சர்வதேச அளவில் டிவில்லியர்ஸ் ரசிகர்களை பெற்றுள்ளார். இந்தியாவில் டி வில்லியர்சுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை பறக்கவிடுவதால், 360 டிகிரி என வர்ணிக்கப்படுபவர் டிவில்லியர்ஸ். ஐபிஎல்-லில் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார்.
114 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 8765 ரன்கள் எடுத்துள்ளார். 228 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள டிவில்லியர்ஸ் 9577 ரன்களை குவித்துள்ளார். 78 சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் விளையாடி 1672 ரன்கள் எடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.