இந்திய விடுதலை போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் மறைந்த தினம்…!
இந்திய விடுதலை போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் மறைந்த தினம்.
தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் ஒரு இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் ஆவார். இவர் 1870ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி வங்கதேச தலைநகர் தாகா அருகே விக்ரம்பூரில் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய தலைவராக திகழ்ந்த, இவர் சுபாஷ் சந்திர போஸின் அரசியல் குருவாக விளங்கினார்.
இவர் காங்கிரஸ் கட்சி ஒத்துழையாமை இயக்கத்தை கைவிட்டதை தொடர்ந்து, 1922-ஆம் ஆண்டு சுயராஜ்ஜிய கட்சியை தொடங்கினார். பின் 192-ஆம் ஆண்டு நாடாளுமன்ற கவுன்சில் உறுப்பினரானார். 1924ஆம் ஆண்டு நடந்த கல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் சுயராஜ்ய கட்சி வெற்றிபெற்று, சித்தரஞ்சன் தாஸ் மேயர் ஆனார்.
சாகர் சங்கீத் கவிதைத் தொகுப்பு, நாராயண்மாலா, கிஷோர் கிஷோரி, அந்தர்யாமி உள்ளிட்ட புத்தகங்கள் மற்றும் இவர் திலகர் குறித்து பல நூல்கள் எழுதியுள்ளார். இவர்,1925-ஆம் ஆண்டு ஜூன் 16 அன்று டார்ஜிலிங்கில் தனது 55-ஆவது வயதில் இறந்தார். அவரது உடல் கல்கத்தாவுக்குக் கொண்டுவரப்பட்டு மக்களின் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.