மிரட்டலான சண்டைக் காட்சிகளுடன் உருவாகும் டான்… வெளியான வைரல் புகைப்படம்..!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் படத்தின் சண்டைக்காட்சி படமாக்கும் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா மற்றும் நடிகை பிரியங்கா அருள் மோகன், நடிகர் சூரி, நடிகர் சமுத்திரக்கனி, முனீஷ்காந்த்,காளி வெங்கட் மற்றும் பாலா குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி ,ஆர்ஜே விஜய் ஆகியோரும் நடிக்கின்றார்கள்.
இந்த படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். சிவகார்த்தி கேயனின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது கோயம்பத்தூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்திலிருந்து சண்டைக்காட்சி படமாக்கும் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து படத்திற்காக காத்துள்ளார்கள்.
@Siva_Kartikeyan anna Massive Fight On the Way#PrinceSK @DONMovieOffl #DON pic.twitter.com/8bLjyC95Z7
— SivaKarthikeyan Fans Club (@_SK_Fans_club_) March 8, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!
April 10, 2025
கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!
April 10, 2025