டேவிட் வார்னர் அடித்த சதத்தால் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்திற்கு சரிந்தது !
நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா, பங்களாதேஷ் அணி மோதியது.இப்போட்டி நாட்டிங்ஹாம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 381 ரன்கள் குவித்தனர்.பின்னர் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 333 ரன்கள் எடுத்து 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைத்தது.
இந்நிலையில் இதுவரை நடந்து முடிந்த உலகக்கோப்பை போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த அணிகளில் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்தை பிடித்து உள்ளது. நேற்று நடந்த போட்டியில் டேவிட் வார்னர் 147 பந்திற்கு 166 ரன்கள் குவித்தார்.அதில் 14 பவுண்டரி ,5 சிக்ஸர் விளாசினார்.
டேவிட் வார்னர் அடித்த சதத்தால் ஆஸ்திரேலிய அணி இதுவரை உலகக்கோப்பையில் 29 சதத்தை அடித்து முதல் இடத்தில் உள்ளது.இந்திய அணி 28 சதங்கள் அடித்து இரண்டாம் இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியா – 29*
இந்தியா – 28
இலங்கை – 23
வெஸ்ட் இண்டீஸ் – 17
இங்கிலாந்து – 16
நியூசிலாந்து – 16
தென்னாபிரிக்கா – 14
பாகிஸ்தான் – 14