பங்களாதேஷ் வீரர் ஷாகிப் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர் !
நடப்பு உலகக்கோப்பை தொடரில் 26 போட்டியில் ஆஸ்திரேலியா,பங்களாதேஷ் இரு அணி மோதியது. இப்போட்டி நாட்டிங்ஹாம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 381 ரன்கள் குவித்தனர்.
பின்னர் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 333 ரன்கள் எடுத்து 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைத்தது.இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடிய 166 ரன்கள் குவித்தார்.
அதன் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் முதலிடத்தில் தற்போது டேவிட் வார்னர் உள்ளார்.இதற்கு முன் பங்களாதேஷ் அணி வீரர் ஷாகிப் 425 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருந்தார்.தற்போது அவரது சாதனையை டேவிட் வார்னர் 447ரன்கள் எடுத்து முறியடித்து உள்ளார்.
David Warner – 447 runs
Shakib Al Hasan – 425 runs
Aaron Finch – 396 runs
Joe Root – 367 runs
Rohit Sharma – 319 runs