அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பென்னட் (57) என்பவர் இதய நோயால் பாதிக்கப்பட்டதையடுத்து,அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்த நிலையில்,அவரது உடல் மனித இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒத்துழைக்காது என்ற காரணத்தால்,மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்த முடிவானது. இதற்கு டேவிட் பென்னட் மற்றும் அவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து,ஜனவரி 7 ஆம் தேதி அவருக்கு மேரிலேண்ட் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது.இந்த அறுவை சிகிச்சை சுமார் 8 மணி நேரம் நீடித்த நிலையில்,அவருக்கு பன்றியின் இதயத்தை மருத்துவர்கள் வெற்றிகரமாக பொருத்தினார்கள்.இதன்மூலம்,பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட முதல் நபராக டேவிட் பென்னட் உள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில்:
“இந்த வரலாற்று முயற்சியில் ஈடுபட்ட ஒவ்வொரு புதுமையான தருணத்திற்கும்,ஒவ்வொரு கனவுக்கும், ஒவ்வொரு தூக்கமில்லாத இரவுக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்று கூறினார்.
பல தசாப்தங்களாக மனிதர்களின் உயிரைக் காக்கும் மாற்று அறுவை சிகிச்சைக்கு விலங்குகளின் உறுப்புகளைப் பயன்படுத்த மருத்துவர்கள் முயன்று வருகின்றனர்.அந்த வகையில்,மேரிலாந்தில் உள்ள ஹேகர்ஸ்டவுனைச் சேர்ந்த ஒரு கைவினைஞரான பென்னட், இந்த புதிய முயற்சிக்கு ஒரு விதையாக இருந்தார், ஏனெனில் அவர் மரணத்தை எதிர்கொண்டார்.
இதன்காரணமாக,அவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நிலையில்,முதலில், பன்றியின் இதயம் செயல்பட்டது, மேலும் பென்னட் மெதுவாக குணமடைந்து வருவதாக மேரிலாந்து மருத்துவமனை அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டது.
இந்நிலையில்,டேவிட் பென்னட் அமெரிக்காவில் உள்ள மேரிலேண்ட் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் உயிரிழந்துள்ளார்.ஆனால்,அவரது உயிரிழப்புக்கான சரியான காரணத்தை மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை.எனினும்,சில நாட்களுக்கு முன்பு இருந்தே அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…