மருமகள்களே உங்கள் மாமனார் மாமியாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் தெரியுமா?

Default Image
  • மருமகள்களே உங்கள் மாமனார் மாமியாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.

உறவுகளுக்கிடையே பிரச்னை என்பது சகஜமான ஒன்று தான். ஆனால், அந்த பிரச்சனையை தீர்ப்பதற்கும் எளிதான வழிகள் உண்டு. ஆனால் அந்த வழிமுறைங்களை நாம் ஒருபோதும் கடைபிடிப்பதில்லை.

அதிகமாக சண்டை வரும் உறவுகள் என்றால், அது மாமியார்-மருமகள் உறவுகள் தான். பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்குள் செல்லும்பெண் பல கனவுகளோடு தான் செல்வாள். அது தனது வீட்டுக்கு வரும் மருமகள் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்புகளோடு காத்திருப்பவர்கள் மாமியார்.

Image result for மாமியார் - மருமகள்

என்றைக்குமே யாராக இருந்தாலும், எதிர்பார்ப்பு என்பது இருக்கவே கூடாது. எதிர்பார்த்து இருந்து அதுநடந்தாள்,  சந்தோசம் போல் ஒரு சந்தோசம் கிடையாது. அனால், எதிர்பார்த்து அது நடக்காமல் போனால், அது போல ஒரு கொடிய வலி ஒன்று கிடையாது.

மாமியாருக்கு மருமகளை பிடிக்காததற்கு காரணம்

Image result for மாமியார் - மருமகள்

சில மாமியார்களுக்கு மருமகள்களை பிடிக்காத காரணம் என்னவென்றால், இதுவரை நாம் பாசமாக வளர்த்த எனது மகனை நம்மை விட்டு பிரித்து விடுவாலய என்ற ஒரு பயமும், இவள் நம்மை வீட்டை விட்டு வெளியில் போ என்று சொல்லிவிட்டால் நாம் என்ன செய்வது என்ற அச்சமும் தான் மருமகளை மாமியாருக்கு பிடிக்காத கரணம்.

மாமியாரை பாராட்டுங்கள்

Image result for மாமியார் - மருமகள்

பாராட்டிற்கு உருகாத உள்ளங்களே கிடையாது. மாமியார் தனது வாழ்வில் பட்ட கஸ்டங்களையோ அல்லது அவரது மகனை வளர்க்க அவர் பட்ட கஸ்டங்களையோ சொல்லும் போது அவர்களை உயர்த்தி பேசுங்கள். அப்படி நீங்கள் பேசும் போது, உங்கள் மீது மாமியாருக்கு சிறந்த அபிப்பிராயம் உண்டாகும்.

மனம் வராது

Image result for மாமியார் - மருமகள்

சில மாமியாருக்கு நீங்கள் அவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்தாலும், நீங்கள் நன்கு வேலை செய்கிறீர்கள் என்று கூறுவதற்கு மனம் வராது. உங்களை மனதார புகழுவதற்கு மனம் வராது. அவர்கள் உண்ணகளை புகழாவிட்டாலும் உங்கள் பணிகளை நீங்கள் ஆத்மார்த்தமாக செய்யுங்கள். அவர்கள் அதை உணர்ந்து கொள்வார்கள்.

உங்கள் உறவுகளை போல கவனியுங்கள்

புகுந்த வீட்டிற்குள் செல்லும் மருமகள்கள் தங்களது உறவுகளை கவனிப்பதில் எவ்வாறு கவனம் செலுத்துவீர்களோ, அது போல தனது கணவரின் உறவுகளை கவனிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

Image result for மாமியார் - மருமகள்

 

வருடத்தில் ஒரு முறையாவது வெளியில் சுற்றுலா செல்லும் போது, அவர்களை அழைத்து செல்ல வேண்டும். அவ்வாறு செய்யும் போது, அவர்களுக்கு உங்கள் மீது பாசம் அதிகமாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்