சதிஷிற்கு ஜோடியாகும் தர்ஷா குப்தா.!
சன்னிலியோன் நடிக்கும் திகில் நிறைந்த காமெடி படத்தில் நடிகர் சதிஷிற்கு ஜோடியாக தர்ஷா குப்தா நடிக்கவுள்ளார்.
குக்வித்கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷா குப்தா தற்போது இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகும் ருத்ரதாண்டவம் படத்தில் நடிகர் ரிச்சர்ட்க்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் காமடி ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சதிஷிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். திகில் நிறைந்த காமெடி படமாக உருவாகவுள்ள இந்த படத்தில் நடிகை சன்னிலியோன் முன்னை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தை யுவன் இயக்குகிறார். படத்தை வீரசக்தி மற்றும் சசிகுமார் இருவரும் இணைந்து தயாரிக்கின்றார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜாவிட் இசையமைக்கிறார். மேலும் படத்தில் மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபத்திரத்தில் நடிக்கிறார்கள்.