மீனவ குடும்பத்தினருக்கு உதவி செய்த தர்ஷா குப்தா..!!
வருமானமின்றி தவிக்கும் மீனவ குடும்பத்தினருக்கு நடிகை தர்ஷா குப்தா தன்னால் முடிந்த உதவியை செய்துள்ளார்.
கொரோனா 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் பாதிப்பக்கப்பட்டு வருகின்றார்கள்.
இந்த நிலையில், வருமானமின்றி தவிக்கும் மக்களுக்கு பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷா குப்தா சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள வருமானமின்றி தவிக்கும் மீனவ குடும்பத்தினருக்கு தன்னால் முடிந்த உதவியை செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறுகையில் ” சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள வருமானமின்றி தவிக்கும் மீனவ குடும்பத்தினருக்கு என்னால் முடிந்த உதவி செய்தேன். நீங்களும் இல்லாதவர்களுக்கு உதவுங்கள் உங்கள் சந்ததி வாழும்” என்று தெரிவித்துள்ளார்.
View this post on Instagram