சூப்பர் ஸ்டாரின் தர்பார் ட்ரைலர் பற்றி மாஸ் அப்டேட் கூறிய முக்கிய பிரபலம்!
- A.R.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் திரைப்படம் தர்பார்.
- இப்படத்தின் டிரைலரை பார்த்து விட்டதாகவும் அது நன்றாக இருப்பதாகவும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார்.
இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து வரும் ஜனவரியில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன் ட்விட்டரில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், ‘ நான் டிரைலரை பார்த்து விட்டேன். அது மிகவும் நன்றாக இருக்கிறது என்றும், என்றும் இளமையானவர் ரஜினிகாந்த்.’ என பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் ரஜினி பிறந்த நாளான இன்று கண்டிப்பாக இப்படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால், தயாரிப்பு தரப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
His Birthday is on 12 th Dec though????
— SantoshSivanASC. ISC (@santoshsivan) December 10, 2019
A ver big happy birthday to Rajini Sir.. and Darbar Trailer???????? he is ageless ????????
— SantoshSivanASC. ISC (@santoshsivan) December 10, 2019
To all the dear Rajini Sir Fans -There is no date finalised for Trailer yet.
— SantoshSivanASC. ISC (@santoshsivan) December 11, 2019