சூப்பர் ஸ்டாரின் தர்பார் வெற்றி பெற மண்சோறு சாப்பிடும் ரஜினி வெறியர்கள்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
- சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவான தர்பார் திரைப்படம் இன்று பிரமாண்டமாக வெளியாகியுள்ளது.
- இப்படத்தை வெற்றி படமாக்க வேண்டி ரசிகர்கள் அலகு குத்தி மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனை செய்தனர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் தர்பார். இப்படத்திற்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. லைகா நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
இப்படம் உலகம் முழுக்க நல்ல வெற்றியை அடைய வேண்டி மதுரை ரஜினி ரசிகர்கள் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சென்று அழகு குத்தியும், மண் சோறு சாப்பிட்டும் பிரார்த்தனை செய்தனர்.
இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். நிவேதா தாமஸ், யோகி பாபு, சுனில் செட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.