சென்சாருக்கு தயாரான தர்பார்! எவ்வளவு நேரம் திரைப்படம் ஓடும் என்று தெரியுமா?
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
- தர்பார் திரைப்படம் முழுவதும் முடிந்து ஜனவரி மாதம் ரிலீசுக்கு ரெடியாகிவிட்டது.
- இப்படம் விரைவில் சென்சார் செய்யப்பட உள்ளது. இப்படம் 158 நிமிடங்கள் ஓடும் என கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
ஆதித்யா அருணாச்சலம் எனும் கதாபாத்திரத்தில் சூப்பர்ஸ்டார் போலீசாக இப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. அதில் ரஜினியின் மேனரிசமும் அவரது வசனங்களும் ரசிகர்களின் கொண்ட வைத்துள்ளது. படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது சென்சாருக்கு தர்பார் தயாராகிவிட்டதாம்.
இப்படம் 158 நிமிடங்கள் ஓடும் என தகவல் வெளியாகி உள்ளது. அதாவது 2 மணிநேரம் 48 நிமிடம் படத்தின் நீளம் இருக்குமாம். விரைவில் இப்படம் சென்சார் செய்யப்பட உள்ளது. சான்று அளிக்கப்பட்ட உடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.