பீஸ்ட் படத்தில் ஷபீர் கல்லரக்கல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக இணயத்தில் தகவல் பரவி வருகிறது.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பீஸ்ட் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. அறிவிப்பில் இயக்குனர் செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், அங்குர் அஜித்விகல், ஷைன் டாம் சக்கோலி, லிபுட் ஃபரூக் ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து தற்போது பீஸ்ட் படத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் கல்லரக்கல் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக இணயத்தில் தகவல் பரவி வருகிறது. ஆனால் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஷபீர் நடிப்பது குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவிக்குமா இல்லை இது வதந்தி தகவலா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக திமுகவை விமர்சித்து பேசி வருவதால் அவருக்கு திமுக…
சென்னை : தரமான படைப்புகளை எப்போது ஏமாற்றம் அளிக்காமல் மக்களுக்கு கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இதுவரை இவர் இயக்கிய…
சென்னை: ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு…
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல்…
சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…
சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…