அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் ஓப்பனிங் பாடலிற்கு நடன ஆசிரியராக தினேஷ் மாஸ்டர் பணியாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் தற்போது வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஹெச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்தில் ஹூமா குரேஷூ நாயகியாகவும் ,கார்த்திகேயா வில்லனாகவும், அம்மாவாக நடிகை சுமித்ராவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் யோகி பாபு,பேர்லி மன்னி,குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் முடிவடையும் என்றும் , ஒரு ஸ்டண்ட் காட்சி மட்டும் படமாக்கப்பட உள்ளதாகவும்,விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கவுள்ளதாகவும், படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்துள்ளதாகவும் போனி கபூர் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வலிமை படத்தின் முதல் பாடல் முடித்துள்ளதாகவும் அந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளதாகவும், இந்த பாடலுக்காக ஒரிசாவில் ட்ரம்ஸ் வாசிக்கும் கலைஞர்களை பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அந்த பாடலுக்கு நடன ஆசிரியராக தினேஷ் மாஸ்டர் பணியாற்றியுள்ளதாகவும், அந்த பாடல் ஷுட் செய்து முடித்தவுடன் நடிகர் அஜித் அருமை என்றும் கூறிஉள்ளர்த்தஹகி தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இன்னும் மூன்று நாட்களில் வலிமை படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…