அட இது தெரியாம போச்சே..! இனிமேல் பழைய டூத் பிரஸ்ஸை தூக்கி எறியாதீங்க…!
பிரஸ் பழையதாகும் போது தூக்கி எறியாதீர்கள். பழைய டூத் பிரஸால் நாம் என்னென்ன செய்யலாம் தெரியுமா?
நாம் அனைவரும் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய பொருட்களில் ஒன்று டூத் பிரஸ். இதனை நம் பல் துலக்குவதற்காக மட்டும் தான் பயன்படுத்துகிறோம். பின் அது பழையதாக மாறியவுடன் தூக்கி எரிந்து விடுகிறோம். ஆனால்,அப்படி பிரஸ் பழையதாகும் போது தூக்கி எறியாதீர்கள். பழைய டூத் பிரஸால் நாம் என்னென்ன செய்யலாம் என்பது பற்றி பார்ப்போம்.
டைல்ஸை சுத்தப்படுத்த
உங்கள் வீடுகளில் டைல்ஸ் பதிக்கப்பட்டிருந்தால், அந்த டைல்ஸ் இடுக்குகளில் உள்ள அழுக்குகள் மாப் வைத்து துடைத்தால் போகாது. அப்படிப்பட்ட இடங்களில் டூத் பிரஸ்ஸை வைத்து சுத்தம் செய்தால், அந்த அழுக்குகள் போய்விடும்.
சீப்பு சுத்தம்
சீப்பில் உள்ள அழுக்குகளை போக்க, முதலில் சூடான நீரில், சோப்பு தூளை கலந்து சீப்பை ஊறவைத்து, பின் டூத் பிரஸை கொண்டு சுத்தம் செய்தால், சீப்பில் உள்ள அழுக்குகள் போய்விடும்.
அடுப்பு
அடுப்புகளில் படிந்துள்ள எண்ணெய் பசையை சுத்தம் செய்ய டூத் பிரஷை பயன்படுத்தலாம். சமையல் சோடா மற்றும் சோப்பு தூள் இரண்டையும் வெந்நீரில் கலந்து பிரஷால் தேய்த்தால், அழுக்குகள் போய்விடும்.
கதவு, ஜன்னல்
கதவு, ஜன்னல் ஆகியவற்றின் இடுக்குகளில் படிந்துள்ள அழுக்குகளை போக்க, டூத் பிரஷை பயன்படுத்தலாம். பூக்களால் வேலைப்பாடு செய்யப்பட்ட கதவு, ஜன்னல்களில் உள்ள அழுக்கை போக்கலாம்.