அடடா …., 96.6 கோடிக்கு ஏலம் போன ஆல்பர்ட் ஐன்ஸ்டினின் கையெழுத்து பிரதி!
தலைசிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டினின் கையெழுத்து பிரதி 96.6 கோடி ஏலத்திற்கு விற்பனையாகியுள்ளது.
உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இவர் தனது சார்பில் கோட்பாடு மூலமாக அனைவரையும் வியக்க வைத்தவர். தற்பொழுதும் மறைந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்கள் தனது கையால் எழுதிய சார்பியல் கோட்பாடுகள் கொண்ட பிரதி பாரிஸ் நகரில் உள்ள ஏல நிலையத்தில் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இரண்டு மில்லியன் யூரோக்கள் ஏலத்தில் விடப்பட்ட இந்த பிரதி எதிர்பார்க்காத அளவுக்கு ஏலம் போயுள்ளது. அதாவது 11.7 மில்லியன் யூரோக்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 96.6 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த கைப்பிரதி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் நெருங்கிய நண்பரான சுவிட்சர்லாந்து நாட்டின் இயற்பியலாளர்கள் மிச்செல் பெஸ்ஸோ என்பவரால் பாதுகாத்து வைக்கப்பட்டது என கூறப்படுகிறது.