இசையமைப்பாளர் தமன் தனது ட்வீட்டர் பக்கத்தில் யுவன் இசையமைத்த வலிமை படத்தில் இடம்பெற்ற பாடலை பார்த்தேன், கண்டிப்பாக வலிமை படத்திற்கும் அஜித்துக்காக காத்திருப்பதும் வொர்த் தான் என்று கூறியுள்ளார்.
நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது .
இந்த நிலையில் தற்போது அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த வலிமை படம் குறித்த அப்டேட்டை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் கடந்த 15 ஆம் தேதி அறிவித்தார். வலிமை படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டத்திலிருந்து ஒரு அப்டேட் கூட விடாததால் கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் போன்றவர்களிடம் வலிமை அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் வந்தனர். அதனை தொடர்ந்து நடிகர் அஜித் வருத்தத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதற்கு பிறகும் சிலர் வலிமை அப்டேட் கேட்டு வருகிறார்கள் அந்த வகையில் பிரபல இசையமைப்பாளரான தமனிடம் ரசிகர்கள் ஒருவர் வலிமை அப்டேட் கேட்டார் அதற்கு பதிலளித்த தமன் ” எனது சகோதரர், டார்லிங் யுவன் இசையமைத்த வலிமை படத்தில் இடம்பெற்ற பாடலை பார்த்தேன், கண்டிப்பாக வலிமை படத்திற்கும் தல அஜித்திற்கு காத்திருப்பதும் வொர்த் தான் என்று கூறியுள்ளார். இதனால் தற்போது அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் முதல் பாடலுக்காக காத்துள்ளார்கள். மேலும் அந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…