தினம் ஒரு கதை- ” பாவத்தின் சம்பளம் “

Default Image
  • தினம் ஒரு கதையில்  இன்று , நாம் செய்யும் கர்மம் 
  • அதன் பலனை எப்படியும் அனுபவதித்தே தீர வேண்டும் அதை விளக்கும் ஒரு அற்புதமான கதை

அரண்மனை என்றால் யார் இருப்பார்கள் ராஜவும் ,ராணியும் தான் இருவரும் அரண்மனை மாடத்தில் நின்று கொண்டு சிறுது நேரம் பொழுதை கழித்தவாறு  வாழைப்பழத்தினை உண்கின்றனர்.அவ்வாறே ஊடலுடன் உரையாடலும் சென்று கொண்டிருந்தது.

ஊடலில் உரையாடி கொண்டிருந்தவர்கள் தாங்கள் உண்ட பழத்தின் தோலை வீதியில் வீசியெரிந்து விடவே அந்த வழியாக சந்நியாசி ஒருவர் கடுமையான பசியோடு வருகிறார்.வேறு வழியில்லாமல் உண்பதற்கு வாழைப்பழத் தோல் ஆவது கிடைத்ததே என்று அதனை உண்டுவிடுகிறார்.

இதனை கண்ட  காவலர்கள் சந்நியாசியை இழுத்து கொண்டுப் போய் அரசனிடம் ஒப்படைத்து விட்டனர்.அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.தர்ம சிந்தனை சிறிதளவு கூட இல்லாத அரசன் அச்சந்நியாசிக்கு சாட்டை அடியை கொடுக்க ஆணையிட்டான்

Image result for அகோரிகள்

அவ்வாறே சாவுக்கடியும் கொடுக்கப்பட்டது.ஆனால் அடி வாங்கும் போது அந்நியாசி பலத்த குரலால் சிரிக்கின்றார்.இதனை கண்டு ஆத்திரம் கொண்ட அரசனுக்கு எரிச்சலுடன் கோபம் ஏற்பட்டது.ஏ சந்நியாசியே எதற்குப்பா சிரிக்கிறாய் என்று அரசன் கேட்கவே அந்த சந்நியாசியோ இல்லை மன்னா! தோலை தின்றத்திற்கே இந்த அடி என்றால்..அப்பழத்தை தின்ற தங்களுக்கு எதிர்காலத்தில் எத்தனை அடி விழும் என்று யோசித்தேன் அதனால் தான் சிரிப்பை அடக்க முடியவில்லை என்று கூறினார் மன்னன் ஒரு நிமிடம் அசைவற்று நின்றான் பின் தன் தவறினை உணர்ந்து கொண்டான்.

இக்கதை மூலம் தெரியவருவது என்னவென்றால் தீதும் நன்றும் பிறர் தர வரா அதனை நாம் தான் நமக்கு ஏற்படுத்திக் கொள்கிறோம்.நாம் செய்யும் பாவத்திற்கு எல்லாம் தக்க சமயத்தில் அதன் சம்மானம் என்று சொல்லப்படும் சம்பளத்தை வட்டியும் முதலுமாக நம்மை நோக்கி வரும் என்பதை இக்கதை எடுத்து கூறுகிறது.

“பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமர்க்கின்னா

பிற்பகல் தாமே வரும்”.

என்று வள்ளுவரும் விளக்குகிறார்.ஆகவே நன்மைகளை செய்வதன் மூலம் நல்ல மனிதராக வாழ்வோம்.நலம் பெறுவோம் பிறருக்கு தீமை செய்வதால் அது நம்மை நோக்கியே சுவர் மீது எரிந்த பந்து போல் திரும்பி வரும் என்பதை மறக்க கூடாது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

SRHvsMI
Ajith Kumar Racing
ponmudi - highcourt
Vijay -Waqf Amendment Bill
Munaf Patel FINE
Dhankar