வயதின் உலகநாயகன் என்று அழைக்கப்படும் சாருஹாசன் தாதாவாக நடிக்கும் படத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசன் சகோதரரான சாருஹாசன் நடிப்பில் கடந்த 2019ல் தாதா87 என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தனது நடிப்பு திறமையால் தாதாவாக வயதின் உலகநாயகன் என்று அழைக்கப்படும் சாருஹாசன் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய இந்த படத்தை விஜய் ஸ்ரீ இயக்கியிருந்தார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளனர்.
பலம் என்பது உடல் வலிமையை வைத்து முடிவு செய்வதில்லை, மூளையையும் வைத்து முடிவு செய்யப்படுகிறது. சத்திரியனாக இருப்பது மட்டுமில்லாமல் சாணக்கியனாகவும் இருக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்து சாருஹாசனை வைத்து மீண்டும் ‘தாதா87 – 2.0’ என்ற படத்தை இயக்கவுள்ளார். உள்ளூரில் சாமானியவனாக இருக்கும் ஒரு தாதா,
தனது மூளையை பயன்படுத்தி எப்படி உலகத்தில் உள்ள தாதாக்களை ஆள போகிறார், எவ்வாறு தவிர்க்க முடியாத இடத்தை பிடிக்கிறார் என்பதே இந்த படத்தின் கதை. 90 வயதான தாதாவாக நடிக்கும் சாருஹாசனுடன் நடிகர் விக்ரம் அவர்களின் தங்கையான அனிதாவின் மகன் அர்ஜுமன் இதன் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார் மேலும் ஐஸ்வர்யா தத்தா, சாண்ட்ரியா, சாந்தினி, அனித்ரா நாயர், ஜூலி, மனம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
லியாண்டர் லீ மார்ட்டி இசையமைக்கும் இந்த படத்தில் கோபி ஒளிப்பதிவு செய்கிறார். கொரோனா ஊரடங்கு முடிந்ததும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த படத்திலிருந்து சாருஹாசன் அவர்களின் ஸ்டில்ஸ் வெளியாகி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…