வின்னர் படத்துக்காக அப்பா ரொம்ப கஷ்டப்பட்டார் – வடிவேலு மகன்.!
வின்னர் படத்துக்காக வடிவேலு மிகவும் கஷ்டப்பட்டார் என வடிவேலு மகன் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் வடிவேலுவை ரசிகர்கள் அவரை “வைகைப்புயல்” என்று அழைத்தனர். அப்போதிலிருந்து இப்போது வரை அசைக்க முடியாத காமெடியன் என்றால் வைகைப்புயல் வடிவேலு என்று கூறலாம்.
வடிவேலுக்கு 3 மகளும் சுப்பிரமணி என்ற மகனும் உள்ளார்கள். இந்நிலையில், சுப்பிரமணி சமீபத்தில் பேட்டி ஒன்றில் வடிவேலு குறித்து பேசியுள்ளார். அப்பாவிடம் நான் நடிக்கபோறனு சொல்லிருக்கேன்.. அதற்கு அவர் நடிப்பா ஆனா நடிப்பு அவ்வளவு சுலபம் இல்லை அதிகாலை விரைவில் எந்திரிக்க வேண்டும்..
அதுக்கு தகுந்த மாதிரி வேலை செய்யவேண்டும் என சொன்னாரு.. அப்பா மிக பெரிய நடிகர் மாமேதைனு தான் சொல்லனு.. ஆனால் அப்பா வின்னர் படத்துக்காக ரொம்ப கஷ்டப்பட்டார்..
அந்த பட காமெடி ரொம்ப அனைவர்க்கும் பிடிக்கும்..ரசிப்பு தன்மை இல்லாதவங்க கூட அந்த காமெடிகள் ரொம்ப பிடிக்கும்..அப்போம் அந்த படத்தில் நடிக்கும் போது அப்பாவுக்கு காலுல கொஞ்சம் அடிபட்டிருந்தது.. அப்போம் மலை பகுதியில் ஓடும் போது.. ரொம்ப கஷ்ட பட்டு நடிச்சாரு.. எங்களிடம் வந்து கால் வலியில் அழுதார்.. அப்படியும் நடிச்சாரு’ என கூறியுள்ளார்.
இந்நிலையில், நீண்ட வருடங்கள் கழித்து வடிவேலு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள நாய் சேகர் கதையில், நடிக்கவுள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.