அப்பா மேடையில் பேசுகிறார்.! மகன் கண்ணீர் விட்டு அழுகிறார்.! FIR-ன் உருக்கமான நிகழ்வுகள்.!
விஷ்ணு விஷால் – கெளதம் மேனன் இணைந்து நடித்துள்ள FIR திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகியுள்ளது. இதனை நடிகர் பிருத்விராஜ் வெளியிட்டுள்ளார்.
முண்டாசுப்பட்டி, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன், சிலுக்குவார் பட்டி சிங்கம் என்ற படங்களை தேர்வு செய்து நல்ல நடிகராக வலம் வருகிறார் விஷ்ணு விஷால். எஃப்.ஐ.ஆர் படம் தீவிரவாதம், ஐஸ்ஐஎஸ் அமைப்பு, இஸ்லாம் என பலவற்றை பற்றி விறுவிறுப்பாக பேசியுள்ள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தினை மனு ஆனந்த் எனும் அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் இஸ்லாமிய இளைஞராக விஷ்ணு விஷால் நடித்துள்ளார். இப்படத்தில், கெளதம் மேனன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தினை வாங்கி ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.
இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த படத்தின் ட்ரைலரை மலையாள நடிகர் பிரிதிவிராஜ் வெளியிட்டுள்ளார். படத்தின் ட்ரைலர் விறுவிறுப்பாகவும், ஆக்சன் காட்சிகள் நிறைந்ததாகவும் அமைந்துள்ளது. இத்திரைப்படம் பிப்ரவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நேற்று விஷ்ணு விஷாலின் தந்தை முதல் முறையாக மேடை ஏறி பேசினார். அப்போது அவர் கூறுகையில், “சரியோ தவறோ நான் எப்போதும் அவன் கூட இருப்பேன்” முதல் முறையாக சினிமாவை மேடையில் தந்தை பேச்சை கேட்டு விஷ்ணு விஷால் அழ தொடங்கினார்.
மேலும், அவரது தந்தை கூறுகையில், தமிழ்நாடு மக்களின் அன்பு இல்லை என்றால் எவ்வளவு தூரம் விஷ்ணு விஷால் வந்திருக்க முடியாது. என விஷ்ணு விஷால் தந்தை நிகழ்ச்சி உரையாடலை கேட்டு அனைவரும் கை தட்டினார்கள்.