#D44: 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தனுஷ் & அனிருத் கூட்டணி.!
தனுஷின் 44வது படத்தில் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கூட்டணி சேருகிறார் அனிருத்.
நடிகர் தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை 2 படத்திலும், கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 படத்திலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் D44 படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இந்த நிலையில், D44 திரைப்பட கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ‘D44’ படத்தின் அப்டேட் ஒன்று வெளியகியுள்ளது.
ஆம், அனிருத்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் தனது 44வது படத்தில் அனிருத் தான் இசையமைப்பாளர் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளிட்டுள்ளது.
அதனை போல், விஜயின் மாஸ்டர் படத்தில் அனிருத் இசையமைபில் உருவாகியுள்ள “க்விட் பண்ணுடா” என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை இன்று மாலை 6 மணிக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியட இருப்பதாக அறிவிக்கப்பட்டுளது குறிப்பிடத்தக்கது.
They are BACK!
#HappyBirthdayAnirudh #HBDRockstarAnirudh #HBDAnirudh #HappyBirthdayRockstarAnirudh #D44 #DnAisBack @dhanushkraja @anirudhofficial pic.twitter.com/XUlyoXT5ME
— Sun Pictures (@sunpictures) October 16, 2020