இரண்டாவது திருமணத்திற்கு ரெடியான டி.இமான்.! அப்போ முதல் திருமணம்.?

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் டி.இமான் தற்போது பல பெரிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு மோனிகா என்ற பெண்ணை இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வெரோனிகா டோரதி மற்றும் பிபெளசிகா கேத்தி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
திருமணமாகி 13 ஆண்டுகளுக்குப் பின் தனது மனைவி மோனிகாவை விவாகரத்து செய்வதாக கடந்த நவம்பர் மாதம் தெரிவித்திருந்தார்கள். அதன்பிறகு இசையமைப்பாளர் டி.இமான் டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி டிவிட்டரில் , “நானும் மோனிகா ரிச்சர்டும் 2020 முதல் பரஸ்பர சம்மதத்துடன் சட்டபூர்வமாக விவாகரத்து செய்து கொள்கிறோம்” என அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தற்போது இசையமைப்பாளர் இமான் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக இணையத்தில் தகவல்க பரவி வருகிறது மணப்பெண் சென்னையை சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் உமா என்று கூறப்படுகிறது. மேலும் இவர்கள் இருவருக்கும் வரும் மே மாதம் திருமணம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் டி.இமான் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025
“நான்தான் சம்மனை கிழிக்கச் சொன்னேன், என்னை கைது செய்ய வேண்டியதுதானே” – சீமான் மனைவி கயல்விழி!
February 28, 2025