கலிபோர்னியா_வில் சிலிண்டர் வெடித்து விபத்து…!!

Default Image

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகானத்தில் இருக்கும் நகர்  சான்பிரான்சிஸ்கோ . இங்கே தீடிரென்று கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் அருகில் இருந்த ஐந்து கட்ட‌டங்கள் தீக்கிரையாகி சேதமடைந்தது . மேலும் சிலிண்டர் வெடித்த சந்தம் கேட்டதும் மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிலிண்டர் வெடித்ததில் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் மூண்டு சூழ்ந்து கொண்டதால் அருகில் இருந்த குடியிருப்பு வாசிகள் பலர், அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த தீ விபத்தில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என, தீயணைப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.தொடர்ந்து மீட்பு பனி நடைபெற்று வருகின்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்