விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமான “800” என்ற படத்தில் நடிப்பதாக இருந்த நிலையில் இந்த படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது.இதனால் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்படாமல் இருக்க விஜய்சேதுபதி 800 திரைபடத்தில் இருந்து விலகி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று முரளி தரன் கூறினார். இதனையடுத்து எல்லாம் முடிந்துவிட்டது இது குறித்து பேச வேண்டாம் என்று விஜய் சேதுபதி கூறினார்.
இதற்கு இடையில் நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு சமூக வலைத்தளமான ட்விட்டர் மூலம் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் அந்த நபரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது.இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு சமூகவலைத்தளத்தில் பாலியல் மிரட்டல் விடுத்தவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. பதிவிட்டவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…