சியான் -61 அப்டேட்..! பா.ரஞ்சித்துடன் கைகோர்க்கும் விக்ரம்.?
விக்ரமின் 61 வது படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த மாதம் 22-ஆம் தேதி ஓடிடியில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையும், விமர்சகர்களிடையும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் இடம்பெற்ற அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மனதில் பதிந்துவிட்டது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அடுத்ததாக பா.ரஞ்சித் நட்சத்திரங்கள் நகர்கின்றன எனும் காதல் கதையம்சமுள்ள திரைப்படத்தை எடுக்க உள்ளார். அதனை அடுத்து சியான் விக்ரமை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
விக்ரம் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான்-60 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை விக்ரம் முடித்துவிட்டு வருவதற்கும், பா ரஞ்சித் தனது இயக்கத்தில் உருவாகும் படத்தை முடித்துவிட்டு வருவதற்கும் சரியாக அமைந்தால் விக்ரம் – பா ரஞ்சித் இணையும் படம் உருவாக வாய்ப்புள்ளது . இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.