கியூட் வீடியோ: இந்த வயசுலையே பாட முயற்சி செய்யும் செம்பா மகள்..!
சின்னத்திரை நடிகை ஆல்யாவின் மகள் அழகாக பாடுவது போன்ற கியூட்டான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற தொடர் ராஜா ராணி .இதில் ஆல்யா மானஸா ஹீரோயினாகவும் , சஞ்சீவ் ஹீரோவாகவும் நடித்து பல ரசிகர்களை கவர்ந்தனர் .
சீரியலை தாண்டி ஒருவருக்கொருவர் காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொண்டனர் . தற்போது இந்த தம்பதியினருக்கு ஐலா என்ற பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது .தனது குழந்தையின் ஒவ்வொரு செயலையும் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் ஆல்யா தற்போது ஐலாவின் கியூட்டான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.அதில் பின்னணியில் பாடல் பாட அதை கேட்டு ஐலாவும் பாடுகிறார்.அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
View this post on Instagram