முன்பதிவு செய்த கார்களை ரத்து செய்ய தயாரான வாடிக்கையாளர்கள்.!

Default Image

பிஎஸ்6 வாகனங்களின் அதிக விலை உயர்வால் பெரும்பாலான டீலர்களுக்கு வந்த அழைப்புகளில் அதிகமானவை முன்பதிவை ரத்து செய்வதற்கான வழிமுறைகளை கேட்பதாகவே இருந்ததாம்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட்டுள்ள பொதுஊரடங்கால் பல்வேறு தொழில்நிறுவனங்கள் முடங்கின. இதனால் பலரது தங்கள் அன்றாட வாழ்வும் பாதிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான மக்கள் நிதி பற்றாக்குறையினால் தவிக்கும் நிலைக்கு உள்ளானார்கள்.

இதன் காரணமாக பலர் தங்கள் கனவு வாகனமாக முன்பதிவு செய்த கார்களை வாங்க முடியாமல் முன்பதிவினை ரத்து செய்வதில் ஆர்வம் காட்டுவதாக தற்போது தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது. 

குறிப்பாக பட்ஜெட் மாடல் எஸ்யூவி  கார் சந்தையில் முன்னணி நிறுவனங்களான எம்.ஜி மோட்டார்ஸ், கியா மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின் கார்களுக்கு அமோகமான முன்பதிவு இருந்து வந்தது.

இந்த முன்பதிவுகள் பொதுஊரடங்கு தளர்வு உத்தரவுக்கு பிறகு தற்போது குறைந்த அளவிலான பணியாளர்களை மட்டும் வைத்துக்கொண்டு ஆட்டோமொபைல் ஆலைகள் இயங்கி வருகின்றன.

பிஎஸ்6 வாகனங்களின் அதிக விலை உயர்வால் பெரும்பாலான டீலர்களுக்கு வந்த அழைப்புகளில் அதிகமானவை முன்பதிவை ரத்து செய்வதற்கான வழிமுறைகளை கேட்பதாகவே இருந்ததாம். மேலும், பிஎஸ்4 வாகனங்களின் சலுகைகள் மற்றும் விலை விவரங்களை பற்றி பலரும் விசாரிக்க தொடங்கியுள்ளதாவும் தகவல் வெளியாகியுள்ளது. 

பொது ஊரடங்கு முழுவதும் முடிவடைந்து கார் நிறுவன டீலர்கள் தங்கள் ஷோரூம்களை திறந்த பிறகுதான் ரத்து தொடர்பான தெளிவான முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்