அமெரிக்காவின் உயரிய பொறுப்பான அதிபர் பதவிக்கு தேர்தல் வரும் நவம்பர் மாதம் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ள குடியரசு கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடனும் நேருக்கு நேராக தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றனர்.
அதிபர் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் இறுதி கட்ட நேருக்கு நேர் விவாதம் இதுவாகும். இந்த விவாதத்தின் தொடக்கத்தில் பேசிய அதிபர் டிரம்ப், பெரும்பானமையான மாகாணங்களில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி கிடைத்துவிடும் என்றும், சில நிறுவனங்களின் தடுப்பூசி சோதனையில் நல்ல முன்னேற்றம் உள்ளது என்றும், இதேபோல் கொரோனா தொற்றால் இறப்பு விகிதம் குறைந்து உள்ளது. மேலும், அரசின் தடுப்பு நடவடிக்கை மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. என்று குறிப்பிட்டார். பின் தொடர்ந்து பேசிய டிரம்ப், பன்றிக்காய்ச்சல் வந்த போது ஜோ பிடன் என்ன செய்தார்? ஜோ பிடன் போல என்னால் முடங்கி இருக்க முடியாது. நோய் பாதித்த 99 சதவிதம் பேர் தற்போது குணம் அடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ முக்கிய காரணம் சீனாவே. நாட்டை முடக்கிய போது தவறு எனக்கூறியவர் ஜோ பிடன். தற்போது முன் கூட்டியே ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என தற்போது கூறுகிறார். ஊரடங்கை தவிர்த்து ஜோ பிடனுக்கு எதுவும் தெரியாது. அதிக தளர்வுகள் கொடுத்தால்தான் பொருளாதாரம் வளரும் என்று தனது உரையில் குறிப்பிட்டார்.
பின் பேசிய ஜோ பிடன் கூறுகையில், நோயுடன் வாழ பழகிக்கொண்டு விட்டோம் என டிரம்ப் கூறினார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உங்களிடம் இருந்து என்ன பதில் உள்ளது?, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த டிரம்பிடம் எந்த திட்டமும் இல்லை. டிரம்ப் எதற்காக மாஸ்க் அணிய மறுக்கிறார். ஜனவரி மாதமே கொரோனா பற்றி தெரிந்து இருந்தும் ஏன் அதை மக்களிடம் சொல்லவில்லை. கொரோனா வைரஸ் பெரிய பிரச்சினையே இல்லை என டிரம்ப் ஆதரவாளர்கள் கூறி வந்தனர். எந்த நாடாக இருந்தாலும் அமெரிக்க தேர்தலில் தலையீட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், எப்போதும், ரஷ்யாவை பற்றி மட்டும் டிரம்ப் ஏன் பேச மறுக்கிறார். அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு இருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது என்று அவர் தனது உரையில் கூறினார். மேலும், இரு தலைவர்களும் தொடர்ந்து காரசாரமாக விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி: கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் வேகப்பந்து…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தந்தை பெரியார் குறித்து பல்வேறு…
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி வளர்ச்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.…
சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளதாக…
ஆந்திரப் பிரதேசம்: திருமலை திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தபோது, அங்கு சொர்க்கவாசல் திறப்பிற்காக வழங்கப்பட்ட இலவச தரிசனத்திற்கான…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பெரியார் குறித்து பேசிய…