சவுதி அரேபியாவில் ஊரடங்கு காலவரையின்றி நீட்டிப்பு – மன்னர் சல்மான் அறிவிப்பு.!

சவுதி அரேபியாவில் ஊரடங்கை காலவரையின்றி நீட்டிப்பதாக அந்நாட்டு மன்னர் சல்மான் அறிவித்துள்ளார்.
உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பலவேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டடு வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக சில நாடுகளில் ஊரடங்கை பின்பற்றி வருகின்றன. அந்தவகையில் சவுதி அரேபியாவில் நாளுக்கு நாள் வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஊரடங்கை காலவரையின்றி நீடிப்பதாக அந்நாட்டு மன்னர் சல்மான் அறிவித்துள்ளார்.
அந்நாட்டில் கொரோனாவால் 4,033 பேர் பாதிக்கப்பட்டு, 52 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 720 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 4 நாட்களில் சுமார் 300 பேருக்கு கொரோனா உறுதியானதால், கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்த நிலையில், ஊரடங்கை காலவரையின்றி நீடிப்பதாக அந்நாட்டு மன்னர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!
April 7, 2025
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025