மலைசியாவில் நாளை முதல் 2 வாரங்களுக்கு ஊரடங்கு- பிரதமர் முகைதீன் யாசின்!
மலைசியாவில் கொரோனா பரவல் காரணமாக நாளை முதல் 2 வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் இதுவரை 1,38,224 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் 555 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து அந்நாட்டு அரசு, கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இந்தநிலையில், மலாக்கா, ஜோகூர், பினாங்கு, சிலாங்கூர், சாபா ஆகிய 5 மாநிலங்களிலும், கோலாலம்பூர், லபுவான், புத்ராஜெயா ஆகிய இடங்களில் நாளை முதல் 14 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு விதித்து அந்நாட்டு பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
மேலும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மாவட்டங்களுக்கிடையிலான பயணங்களுக்கு அனுமதி இல்லை. வீட்டிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிற்கு மட்டுமே பயணம் செய்ய அனுமதி உண்டு. ஒரு வாகனத்தில் இருவர் மட்டுமம் செல்ல வேண்டும். அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் பயணம் செய்துகொள்ள அனுமதி விதிக்கப்பட்டுள்ளது.