ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமாக மெல்போர்னில் கொரோனா தொற்று அதிகரித்த பின்னர் அங்கு ஐந்து மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் 6 வாரங்களுக்கு ஊரடங்கு என்று அதிகாரிகள் நேற்று அறிவித்தனர். மேலும் மார்ச் மாதம் முதல் எப்போதும் இல்லாதவகையில் நேற்று முன் தினம் ஒரே நாளில், 191 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இந்நிலையில் மாநில பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் இன்று தொடங்கி குறைந்தது ஆறு வாரங்கள் நீடிக்கும் என்று கூறினார். ஏனெனில் கொரோனா வைரஸ் நெருக்கடி முடிந்துவிட்டதாக “நாங்கள் நடிக்க முடியாது” என்று எச்சரித்தார்.
ஆஸ்திரேலியாவிலும் மிகவும் வேகமாகப் பரவிய கொரோனவை அங்கு பிறப்பிக்கப்பட்ட கடுமையான ஊரடங்கு மற்றும் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளால் கடந்த மே மாத இறுதியில் கொரோனா பரவல் 75 சதவீதம் கட்டுக்குள் வந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு காவல்துறையும் இராணுவமும் ஆயிரக்கணக்கான எல்லைக் கடப்பகுதியில் ரோந்து செல்கின்றன மற்றும் ட்ரோன்கள் மற்றும் பிற விமானங்களைப் பயன்படுத்தி கொரோனா வைரஸை தடுப்பதற்கு எல்லைகளை கண்காணிக்கின்றன.
சுகாதார அதிகாரிகள் கடந்த வாரம் சுமார் 300,000 மெல்போர்ன் வீடுகளை ஜூலை இறுதி வரை நகரத்தின் பிற பகுதிகளுக்கு செல்லாத படி மூடிவிட்டனர். ஆஸ்திரேலியாவின் முக்கிமான கொரோனா பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று சுமார் 3,000 பேர் தங்கள் வீடுகளில் முடக்கினர .
மெல்போர்னில் தவிர மற்ற எல்லா இடங்களிலும் வைரஸ் பரவலை பெருமளவில் கட்டுப்படுத்திய பின்னர் தளர்வான கட்டுப்பாடுகளை அனுபவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்ஜ் பார்க் : இந்தியா - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியில்…
டெல்லி : உடல் நலக்குறைவால் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரது மறைவு…
பலுசிஸ்தான் : நேற்று காலை 9 மணி அளவில் பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம்…
சென்னை : புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த "ஓ சொல்றியா மாமா" பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி படத்தின்…
மும்பை : பொதுவாகவே, சினிமா துறையிலும் சரி, விளையாட்டுத் துறைகளிலும் சரி சில பிரபலங்கள் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை ஊடகத்திற்கு…
சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் கட்டமைப்பைப் மேம்பபடுத்துவது தொடர்பாக…