நேபாளத்தில் ஜூலை 22 வரை ஊரடங்கு நீட்டிப்பு.!
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேலாக பரவி உள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரசால் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. நேபாளத்திலும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. நேற்று வரை கொரோனா தொற்றால் 13,564பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,1394 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நேபாளத்தில் நேற்று முன்தினம் நடந்த அமைச்சர்கள் கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. இதனால், ஜூலை 22-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என நேபாள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.