மாஸ்கோவில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு.!
மாஸ்கோவில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளன என மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியான் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் கொரோனா வைரசால் 177,160 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1,625 பேர் உயிரிழந்து உள்ளனர்.இன்று மட்டும் 88பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளன என்று மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியான் தெரிவித்தார்.
மே 12 பிறகு நடைமுறையில் உள்ள சில நடவடிக்கைகளுக்கு தளர்வு கொடுக்கப்படும் என தெரிவித்தார். அதன்படி, தொழில்துறை மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கான பணிக்கு திரும்புவது உட்பட பல நடவடிக்கைகளுக்கு தளர்வு கொடுக்கப்படும் என கூறினார். ஆனால் விளையாட்டு, உணவகங்கள் மற்றும் திரையரங்குகளை மீண்டும் திறப்பது விரைவில் தெரிவிக்கப்படும் என்று சோபியானின் கூறினார்.