ஏப்ரல் 28ம் தேதி வரை மலேசியாவில் ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் முகைதீன் யாசின் அறிவிப்பு.!
மலேசியாவில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஏப்.28ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் முகைதீன் யாசின் கூறியுள்ளார்.
உலகளவில் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளை கொரோனா வைரசால் இதுவரை 1,615,049 பேர் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 96,791 ஆக உள்ளது. மேலும் இதுவரை 362,538 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார்கள். அதில் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், சீனா, ஈரான், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இதுவரை 468,895 பேர் பாதிக்கப்பட்டு, 16,697 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 157,022 பேர் பாதிக்கப்பட்டு, கொரோனாவால் 15,843 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இத்தாலியில் 143,626 பேர் பாதிக்கப்பட்டு, கொரோனாவால் 18,279 உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மலேசியாவில் ஏப்ரல் 28ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் முகைதீன் யாசின் தெரிவிட்டுள்ளார். ஏற்கனவே ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தற்போது ஏப்.28ம் தேதி வரை நீடிப்பதாக அறிவித்துள்ளார். மலேசியாவில் இதுவரை கொரோனாவால் 4,346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆகவும், பாதிக்கப்பட்டவர்களில் 1,830 பேர் குணமடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.