ஜனவரி 24 வரை ஆஸ்திரியாவில் ஊரடங்கு நீட்டிப்பு!
கொரோனா வைரஸ் அதிகரிப்பு காரணமாக ஆஸ்திரியாவில் ஜனவரி 24 ஆம் தேதி வரையிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒரு வருட காலமாக உலகை உலுக்கி வரும் நிலையில் தற்போது மீண்டும் புதிய வகை வீரியமுள்ள கொரோனா வைரஸின் தாக்கம் பல நாடுகளில் பரவி உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது .அதில் ஒன்றாக ஐரோப்பாவிலும் கொரானாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஐரோப்பாவிலுள்ள ஆஸ்திரியாவில் அதிக அளவிலான வைரஸின் தாக்கம் தற்போது பரவ ஆரம்பித்துள்ளது. எனவே இதுவரை அறிவித்திருந்த தளர்வுகளை நீக்கி தற்பொழுது மீண்டும் ஜனவரி 24ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தி உள்ளது. உணவகங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற கடைகளை ஜனவரி 24-ஆம் தேதி வரை மூட வேண்டுமெனவும், கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மேலும் கொரோனா வைரஸ்க்கு சாதகமான சோதனைகளை சந்தித்தவர்கள் ஒரு வாரத்திற்கும் அதிகமாக தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து தெரிவித்துள்ள ஆஸ்திரியாவின் சுகாதார அமைச்சர், ஜனவரி 24 ஆம் தேதி வரையிலும் பள்ளிகளும் மூடப்பட்டு இருக்க வேண்டுமா அல்லது ஏற்கனவே திட்டமிட்டபடி ஜனவரி 18 ஆம் தேதி பள்ளிகள் திறக்க முடியுமா என்பது குறித்து தற்போது சரியான தகவல்கள் தெரியவில்லை. 24ஆம் தேதி அன்று அதிகாரபூர்வமாக ஊரடங்கு முடிவடைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக இது அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.