ஊரடங்கு கருத்து மோதல்.! பிரேசில் சுகாதார அமைச்சர் அதிரடி நீக்கம்.!

கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை மிரட்டி வருகிறது. கொரோனா வைரஸை குணப்படுத்த இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை.இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு தனிமைப்படுத்தல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் மூலம் கொரோனவை கட்டுப்படுத்த முடியும் என அறிவுறுத்தி வருகிறது.
இதையெடுத்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள பல நாடுகள் ஊரடங்கை பிறப்பித்து மக்கள் வீடுகளில் இருக்க வலியுறுத்தி வருகிறது. ஆனால் பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனரோ ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளி மூலம் கொரோனவை கட்டுப்படுத்த முடியாது.
ஊரடங்கு பிறப்பித்தால் பொருளாதார பாதிப்பை என்று கூறுகிறார்.இந்நிலையில் சுகாதாரத்துறை மந்திரி லூயிஸ் ஹென்ரிக் மாண்டெட்டா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் , கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனால் பிரேசில் அதிபர் ஜெர் போல்சனாரோவுக்கும், சுகாதார அமைச்சர் லூயிஸ் ஹென்ரிச் மெண்டெட்டாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் இருந்து வந்தன. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் லூயிஸ் ஹென்ரிக் மாண்டெட்டாவை அதிபர் போல்சனரோ பதவி நீக்கம் செய்தார்.
பிரேசிலில் கொரோனாவால் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும் , 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025