ஜெர்மனியில் மீண்டும் ஊரடங்கு: கடைகள், வர்த்தக நிறுவனங்களை அடைக்க உத்தரவு!
ஜெர்மனியில் அதி தீவிரம் அடைந்துவரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜனவரி மாதம் முழுவதும் கடைகள், வர்த்தக நிறுவனங்களை அடைக்க உத்தரவு.
கொரோனா வைரசால் மிகவும் அதிக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. இங்கு நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் கொரோனா பரவல் இரண்டாம் அலை வீச தொடங்கியுள்ளது. நேற்றுவரை ஜெர்மனியில் 13,36,101 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 21,900 பேர் இறந்துள்ளனர்.
இதனால் மீண்டும் ஜெர்மனியில் ஊரடங்கை அமல்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதுவும் இந்த ஊரடங்கை மிகவும் கடுமையாக பின்பற்ற போவதாக கூறப்படுகிறது. அதன்படி வரும் புதன் கிழமை முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய கட்டுப்பாடுகளின்படி, சூப்பர் மார்க்கெட்டுகள், மருந்தகங்கள், வங்கிகள் மற்றும் கிறிஸ்துமஸ் மரக் கடைகள் போன்ற சில்லறை கடைகள் மூடப்படும். நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் பெரும்பாலான மக்கள் வீடுகளில் இருந்தே வேலை பார்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புத்தாண்டு தினத்தன்று பட்டாசு விற்பனை மற்றும் பொது வெளிப்புற கூட்டங்களுக்கு நாடு தழுவிய தடை விதிக்கப்படும். பொது இடங்களில் மது அருந்துவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளை மூடப்படும். 14 வயது வரையிலான குழந்தைகளைத் தவிர்த்து, இரண்டு வீடுகளில் இருந்து அதிகபட்சம் ஐந்து பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.