கண்களில் உள்ள கருவளையத்தை நீக்கும் வெள்ளரிக்காய்…..!!!
வெள்ளரிக்காய் நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இது நமது அருகாமையில் சந்தைகளில் கிடைக்கக்கூடியது. மலிவான விலையில் கிடைக்க கூடியது. இந்த காயில் நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது. அதுமட்டுமல்லாது இது நமது சருமத்தின் அழகை பேணி பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சருமத்தின் அழகை வெள்ளரி பேணி காக்குமா…..?
வெள்ளரிக்காயில் சருமத்தை பேணி காப்பதற்கான அனைத்து ஆற்றல்களும் உள்ளது. இந்த காய் நமது முகத்தின் அழகை மெருகூட்ட உதவுகிறது. இந்த காயை பல விதங்களில் பயன்படுத்தி நமது சருமத்தின் அழகை பாதுகாக்கலாம்.
வெள்ளரிக்காய் :
வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்தால், கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி, கருவளையங்களும் நீங்கிவிடும்.
முக சுருக்கம் :
வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் முழுவதுமாக பூசி கொண்டு, சில நிமிடங்களுக்கு பிறகு கழுவினால் முக சுருக்கங்கங்க மறையும்.
முகம் பளபளப்பாக :
வெள்ளரிக்காய் உடலுக்கு குளுமை மட்டுமல்ல, முகத்திற்கு ஒளி தரக்கூடியது. மாசுமருவற்ற பளபளப்பான முகத்தை பெறாத தினமும் முகத்தில் வெள்ளரிக்காய் சாற்றை தடவ வேண்டும்.
முகக் கருமை நீங்க :
வெள்ளரிக்காய் சாற்றில் முல்தானிமட்டி மற்றும் பால் சேர்த்து கலந்து முகத்தில் பூசிய பிறகு கழுவினால் வெயிலினால் கருத்த முகம் பொலிவு பெற்று விடும்.
கருவளையம் நீங்க :
கண்ணுக்கு கீழே உள்ள கருப்பு வலயத்தை நீக்க, வெள்ளரி விதை பொடியுடன் தயிர் சேர்த்து பேஸ்ட் போல் குழைத்து தடவி வந்தால் ஒரே மாதத்தில் கருமை காணாமல் போகும்.