செரிமான பிரச்சனையை போக்கும் வெள்ளரிக்காய்…!
வெள்ளரிக்காயில் உள்ள மருத்துவக்குணங்கள்.
வெள்ளிரிக்காய் என்பது தமிழ்நம்மில் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான். இந்த வெள்ளரிக்காயை நாம் பச்சையாகவும் சாப்பிடலாம், சமைத்தும் சாப்பிடலாம். இது நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய பல வகையான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. தற்போது இந்த பதிவில் வெள்ளரிக்காய் என்னென்ன மருத்துவ குணங்களை கொண்டுள்ளது என்பது பற்றி பார்ப்போம்.
செரிமானம்
இன்று சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான உணவுகளை உட்கொள்ளாமல், நமது நாவிற்கு எந்த உணவு ருசியாக இருக்கிறதோ அவற்றை தான் உட்கொள்கிறோம். இவை நமது உடலில் வயிறு சம்பந்தமான பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. அதில் முக்கியமான ஒன்று செரிமான கோளாறு. இந்த பிரச்னை உள்ளவர்கள் வெள்ளரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், இப்பிரச்சனை நீங்கும்.
இரத்தம்
வெள்ளரிக்காயை பொருத்தவரை நமது உடலில் இரத்த சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் அதிகமாக காணப்படுகிறது. ஈரல், கல்லீரல் இவற்றில் சூட்டைத் தணிக்க கூடிய ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உள்ளது. மேலும் இது உடலைக் குளிர வைத்து நமது உடலில் நீர்ச்சத்து வற்றிப் போகாமல் காக்கிறது.
அல்சர்
நாம் சரியான நேரத்துக்கு உணவு உட்கொள்ளாமல், வேலை, வேலை என்று சாப்பிடும் நேரத்தை தவற விடுகிறோம். இவ்வாறு சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளவில்லை என்றால் வயிற்றுப் புண் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இப்படி வயிற்றுப்புண்ணால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டுமணி நேரத்திற்கு ஒரு தடவை சிறிதளவு வெள்ளரிச்சாறு அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
முகப்பொலிவு
வறட்சியான சருமத்தை உடையவர்கள் அடிக்கடி வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் முகம் பொலிவுடன் காணப்படுவதுடன், சரும வறட்சியையும் தடுக்கிறது. ஏனென்றால் வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாக காணப்படுகிறது.