திரும்பி வந்துத்டேன்னு சொல்லு ! ரெய்னா டா ……..
ஐபிஎல் டி 20 தொடரின் 11-வது சீசனுக்கான வீரர்களை தக்க வைக்கும் நிகழ்ச்சி மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்றது….
இதில் 2 ஆண்டுகள் தடைக்குப் பின்னர் மீண்டும் திரும்பி உள்ள மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்துக் கொண்டது. இவர்களில் அதிகபட்சமாக தோனியின் சம்பளம் ரூ.15 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரெய்னா ரூ.11 கோடிக்கும், ஜடேஜா ரூ.7 கோடிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியது குறித்து சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில், “பழைய நினைவுகளுக்குத் திரும்புகிறேன்….. உங்கள் குடும்பத்துடன் இணைவதைக் காட்டிலும் பெரிய மகிழ்ச்சி இருக்காது. எங்களை இணைப்பதற்கான சக்தி தடையற்றது” என்று பதிவிட்டுள்ளார்.
ரெய்னாவின் இப்பதிவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இரண்டு ஆண்டு தடைக் காலத்தில் சுரேஷ் ரெய்னா குஜராத் சூப்பர் லயன் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது…
source: dinasuvadu.com