உக்ரைன் போரின் விளைவாக பிப்ரவரி 23-ல் பீப்பாய் ஒன்றுக்கு 94 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை மார்ச் 8-ம் தேதி 139 டாலராக உச்சம் அடைந்தது. உக்ரைன் ரஷ்யா இடையே சமாதான பேச்சு வார்த்தைகள் தொடங்கிய பின் கச்சா எண்ணெய் விலை படிப்படியாக குறைய தொடங்கியது.
தினமும் 25,00,000 பீப்பாய்கள் அளவுக்கு கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்கி ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை மீண்டும் அமல்படுத்த பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் மீண்டும் இறுதி செய்யப்பட்டால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்.
ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு சம்மதிக்க வேண்டும் என்றால் ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டுமென்று ரஷ்ய அதிபர் கடந்த வாரம் கூறியிருந்தார். இந்நிலையில், ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் விரைவில் இறுதி செய்ய ரஷ்யா முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய் கிழமை கச்சா எண்ணெய் விலை 98 டாலராக மூன்று வாரங்களுக்கு பிறகு குறைந்தது. உக்ரைன் போர் முடிவுக்கு வந்தால் இன்னும் கச்சா எண்ணெய் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…