திருச்சி படைக்கலத் தொழிற்சாலை தயாரித்த துப்பாக்கிகள் சி.ஆர்.பி.எப்., படை டி.ஐ.ஜி., ராவத்திடம் ஒப்படைப்பு…
படைக்கலத் தொழிற்சாலை திருச்சி என அழைக்கப்படும் இந்திய அரசின் நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள பாதுகாப்புத் தொழிற்சாலை ஆகும். இது இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் படைக்கலத் தொழிற்சாலைகள் வாரியத்தின் கீழ் இயங்கும் 41 படைக்கலத் தொழிற்சாலைகளில் ஒன்றாகும். இது 3 ஜூலை 1966 அன்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் இந்த தொழிற்ச்சாலையில் உற்பத்தி 1967ல் ஆரம்பமானது.
இங்கு, மத்திய மற்றும் மாநில போலீஸ் பாதுகாப்பு படையினருக்கான, பல்வேறு ரக துப்பாக்கிகள் தயார் செய்யப்படுகின்றன. இந்நிலையில், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பயன்படுத்துவதற்காக, 6,167 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் தயாரிக்க, ‘ஆர்டர்’ பெறப்பட்டதில், முதல் கட்டமாக, 500 துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டன. இவை, நேற்று, சி.ஆர்.பி.எப்., படை டி.ஐ.ஜி., ராவத்திடம் வழங்கப்பட்டன.