இலங்கையில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்- வைரல் வீடியோ உள்ளே!

Default Image

இலங்கையில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்களால் அங்குள்ள மக்கள் கடலின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இருக்குமோ என அச்சம் தெரிவிக்கின்றனர். 

பொதுவாக கடல் வாழ் உயிரினங்கள் வழி தவறுவதாலோ அல்லது கடலில் ஏற்படக்கூடிய மாறுபட்ட சூழ்நிலை காரணமாகவோ கரை ஒதுங்குவது அல்லது இறந்து கூட்டமாக கடல் நீரால் அடித்து கரைக்கு கொண்டுவரப்படுவது வழக்கம். இந்நிலையில் இலங்கையில் உள்ள கொழும்பு கடற்கரையில் கடந்த சில தினங்களாக கூட்டம் கூட்டமாக திமிங்கலங்கள் கரை ஒதுக்கியுள்ளது. உயிருடன் கரை ஒதுங்கியதால் மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் கடலோரக்காவலர்கள் மற்றும் மீட்பு படையினர் கடலுக்குள் அவற்றை விடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

100 க்கும் மேற்பட்ட திமிங்கலங்களை அது போல கடலில் விட்டுள்ளனர். அதிலும் மீட்பி பணியின் போதே 4 திமிங்கலங்கள் இறந்துவிட்டதாக அங்குள்ள மக்கள் வருத்தம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தற்பொழுதும் ஒன்றொன்றாக கரை ஒதுங்குவதால் மக்களே அவற்றை கடலுக்குள் விடும் முயற்சியில் இறங்கியுள்ளனராம். கடலில் ஏற்படக்கூடிய அசாதாரணமான சூழ்நிலை காரணமாகவும் இவ்வாறு நடக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதால் அங்குள்ள மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்த விடீயோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்