ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வேதனையுடன் உலகத் தலைவர்களுக்குக் தனது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை.
தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானில், ஜனநாயக முறைப்படி தேர்தல்கள் நடத்தப்பட்டு ஹமீது கர்சாய் அதிபரானார். அமெரிக்கப் படைகள், நேட்டோ படைகள் இருந்ததால், தலிபான் தீவிரவாதிகள் அமைதியாக இருந்தனர். இதன்பின் அமெரி்க்க அதிபராக இருந்த ட்ரம்ப் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் படிப்படியாக விலகக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதனிடையே, ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தாக்குதலில் தலீபான்கல் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் புதிய அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன் அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து படிப்படியாக வெளியேறியது.
இதனை பயன்படுத்தி கடந்த சில மாதங்களாக தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான தாகர் உட்பட பல மாவட்டங்களைக் கைப்பற்றியுள்ளனர். கடந்த மாதத்தில் மட்டும் தலிபான்களுக்கும் அரசுப் படைகளுக்கும் ஏற்பட்ட மோதலின் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். மேலும், குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி ஏராளமான குழந்தைகள் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர்.
தலிபான்கள் தாக்குதலால் மிகவும் மோசமான நாடாக ஆப்கானிஸ்தான் மாறி வருவதை நினைத்து அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வேதனையுடன் உலகத் தலைவர்களுக்குக் தனது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். அதில், அன்பார்ந்த உலகத் தலைவர்களே, என் தேசம் முழுமையான நிர்வாக சீர்கேட்டில், குழப்பத்தில் இருக்கிறது. பெண்கள், குழந்தைகள் உட்பட தினந்தோறும் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் பலியாகின்றனர்.
வீடுகளும், உடைமைகளும் அழிக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்தன. எங்களை பெரும் குழப்பத்திலும், முழுமையான சீர்கேட்டிலும் கைவிட்டுவிடாதீர்கள். ஆப்கானிஸ்தான் மக்களை கொல்வதையும், ஆப்கானிய கொடியை அழிப்பதையும் நிறுத்துங்கள் என்றும் நாங்கள் விரும்புகிறோம் அமைதியை எனவும் மிக வேதனையுடன் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, சண்டையை முடிவுக்கு கொண்டுவர அதிகார பகிர்வு மேற்கொள்ள தலிபானுக்கு, ஆப்கான் அரசு அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க படைகளை விளக்கிக் கொண்ட நிலையில், அடுத்தடுத்த நகரங்களை தலிபான்கள் கைப்பற்றி வருகின்றன. தலைநகர் காபூலை தலிபான் நெருங்கும் நிலையில், அதிகார பகிர்வு மேற்கோள் ஆப்கான் அரசு அழைப்பு விடுத்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…
சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய…
பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக…
புதுக்கோட்டை : நகர்ப்புறத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…