திரிபுராவை ஆளப்போவது யார்? தலைகீழ் போகும் பாஜக வெற்றி கருத்து கணிப்பு?
ஆளும் இடதுசாரி கூட்டணிக்கும், பாஜகவுக்கும் இடையே திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் கடும் போட்டி நிலவி வருகிறது.
திரிபுராவில் 25 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி தோல்வி அடையும் என்றும் அந்தக் கட்சியிடம் இருந்து ஆட்சியை பாஜக பறிக்கும் என்றும் 2 கருத்துக் கணிப்புகள் வெளிவந்துள்ளன.
இதனால் திரிபுரா தேர்தல் முடிவகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திரிபுரா தேர்தல் முடிவுகள் தொடக்கம் முதல் பரபரப்புடன் வெளியாகி வருகின்றன. தொடக்கத்தில் ஒரு பாஜக சற்று முன்னிலை வகித்தது. எனினும் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனி்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி, பாஜகவை விட கூடுதலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
நாகாலாந்து(59/60):
பாஜக- 24
என்பிஎஃப்-32
காங்கிரஸ்- 0
மற்றவை-3
திரிபுரா(59/59):
மார்க்சிஸ்ட்-30
பாஜக- 28
மற்றவை- 1
மேகாலயா(56/59):
காங்கிரஸ்-21
பாஜக- 0
என்பிபி- 15
மற்றவை- 2
இடதுசாரி கூட்டணி, பாஜக இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால் முடிவுகள் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.