உலக நாடுகளையெல்லாம் அச்சுறுத்தி வரும் கொவிட்-19 வைரஸ், சீனாவில் கோர தாண்டவமாடி வருகிறது. முதலில் சீனாவில் ஆரம்பித்துப் பரவத் தொடங்கிய, இந்த வைரஸ் இந்தியா, சிங்கப்பூர், அமெரிக்கா என உலகம் முழுக்க 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் அந்நாட்டை வாட்டிவதைக்கிறது. இதனால் அந்நாட்டில் பல கட்டுப்பாடுகளை சீனா அரசு விதித்துள்ளது.
இந்நிலையில் கொவிட்-19 வைரசால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்த வைரசால் நேற்று( ஞாயிற்றுக்கிழமை) உயிரிழப்பின் எண்ணிக்கை 1770-ஐ எட்டியுள்ளது. அதில் 105 பேர் நேற்று மட்டும் பலியாகியுள்ளனர். இது முந்தையவிட சற்று குறைத்துள்ளது என குறிப்பிடப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் குறைந்தது 100 பேர் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 2,048 பேருக்கு புதிதாக இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஹூபேயில் இருந்து மட்டும் 1,933 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வைரசால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,548-ஆக உயர்ந்துள்ளது.
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…