கோவிஷீல்டு 2-வது டோஸ் தடுப்பூசியை 10 மாதத்திற்கு பின் போடுவதால் அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி…!

Default Image

கோவிஷீல்டு 2-வது டோஸ் தடுப்பூசியை 10 மாதத்திற்கு பின் போடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக ஆய்வில் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக  பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்தும் வண்ணம் உலகம் முழுவதும், பல நாடுகளிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோவிஷீல்டு தடுப்பூசி முதல் தவணை செலுத்திக் கொண்டவர்கள், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் கால இடைவெளி அதிகரிப்பதால், நோய் எதிர்ப்பாற்றல் அதிகாரிக்கும் எனக் பல ஆய்வுகள் கூறுகிறது.

அதன்படி, இங்கிலாந்தில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் 120 பேரிடம் நடத்திய ஆய்வில், 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொண்டனர். இவர்களிடம் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதும், 180 நாட்களில் இவர்களது நோய் எதிர்ப்பாற்றல் பாதியாக குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆண்டிற்கு பின் உடலில் ஓரளவுக்கு நோய் எதிர்ப்பாற்றல் எஞ்சியிருந்தது தெரியவந்துள்ளது. 10 மாதத்திற்கு பின்னர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திய போது, அவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் 4 முதல் 18 மடங்கு வரை அதிகரித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஆய்வின் படி, கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், 2-வது தவணை தடுப்பூசியை 10 மாதத்திற்கு பின் போடலாம் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்