டெல்டா வைரஸ் கொரோனாவுக்கு எதிராக செயல்திறன் கொண்ட தடுப்பூசி என்று ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அந்நிறுவனத்தின் தடுப்பூசியை பற்றி தெரிவித்துள்ளது.
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு பல உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதே சமயம் நாடுகள் அனைத்தும் மக்களை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. முக்கியமாக கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக்கியுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதிலும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்துள்ளது.
ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி ஒரு டோஸ் மட்டும் செலுத்தக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடுப்பூசிக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை இந்தியாவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து மத்திய அரசுடன் இந்நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனம் இவர்களின் தடுப்பூசிக்கு இந்தியாவில் பரிசோதனை தேவையில்லை என மத்திய அரசு கூறியதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் இந்த தடுப்பூசி குறித்து, இந்த தடுப்பூசி டெல்டா வகை கொரோனாக்களுக்கு எதிராக தீவிரமான செயல்திறனுடன் செயல்படுவதாக தெரிவித்துள்ளது. சார்ஸ் வைரஸ் எனப்படும் கொடிய சுவாச கோளாறை ஏற்படுத்தும் பிரச்சனைக்கு எதிராகவும் நீடித்து செயல்படுவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசியின் ஒரு டோஸ் அளவு 85% செயல்திறன் கொண்டது. இந்த தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு திறன் 8 மாதகாலம் நீடித்து இருக்கும் என்றும் கூறியுள்ளது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…